Enter your Email Address to subscribe to our newsletters
திருவண்ணாமலை, 18 அக்டோபர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் மலைவாழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதோடு மட்டுமல்லாமல் ஜவ்வாதுமலை பகுதியில் சுற்றுலா பயணிகள் பீமன் நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம், ஆரணி, கலசபாக்கம், ஜமுனாமரத்தூர், செய்யார், வந்தவாசி, சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள ஜமுனாமரத்தூர், அத்திப்பட்டு, கோவிலூர், நம்மியாம்பட்டு, பட்டறைகாடு, ஊர்கவுண்டனூர், ஆண்டியப்பனூர் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளும், மலைவாழ் மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இயற்கை எழிலும் அடர்ந்த வனப்பகுதியும் கொண்ட ஜவ்வாதுமலை பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில் கன மழை பெய்து வருவதால் பீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகள் பீமன் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN