காந்தாரா சேப்டர் 1 – தமிழ்நாட்டில் ₹68.5 கோடி வசூல் - 2 வாரங்களில் மாபெரும் வசூல் சாதனை
சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.) ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் கிரகந்தூர் தயாரித்து, ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா சேப்டர் 1 படம், வெறும் இரண்டு வாரங்களில் தமிழ்நாட்டில் மட்டும் ₹68.5 கோடியைத் தாண்டி, மாபெரும் வசூல் சாதனை படைத்த
காந்தாரா


சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.)

ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், விஜய் கிரகந்தூர் தயாரித்து, ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா சேப்டர் 1 படம், வெறும் இரண்டு வாரங்களில் தமிழ்நாட்டில் மட்டும் ₹68.5 கோடியைத் தாண்டி, மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.

தெய்வீகக் கதைக்களம், வியக்க வைக்கும் காட்சிகள், ஆழமான கதை சொல்லல் — இவை அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு திரைப்படத்தை விட, ஒரு பேரனுபவமாக மாற்றியுள்ளன.

மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்கள், நிரம்பிய திரையரங்குகள் என காந்தாரா சேப்டர் 1, தமிழ்நாட்டில் ஒரு கலாச்சார கொண்டாட்டமாக மாறியுள்ளது.

அஜனீஷ் லோக்நாத் இசையமைத்த மனதை கவரும் பாடல்கள், அரவிந்த் S. காஷ்யப் ஒளிப்பதிவில் ஆச்சரியபட வைக்கும் காட்சிகள் , மற்றும் ரிஷப் ஷெட்டியின் ஆற்றல் மிகு நடிப்பு — இவை அனைத்தும் சேர்ந்து திரையரங்குகளை திருவிழாக்கோலமாக மாற்றியுள்ளது.

ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு இது ஒரு பெருமையான மைல்கல் — கன்னடத்திலிருந்து உலகத் திரை வரை உயர்ந்த தரத்தில் படங்களை வழங்கும் தங்கள் முயற்சியை இந்நிறுவனம் மீண்டும் நிரூபித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் 2 வாரங்களில் ₹68.5 கோடி வசூல்

சாதனை !

தெய்வீக கர்ஜனை இன்னும் தொடர்கிறது!

Hindusthan Samachar / Durai.J