Enter your Email Address to subscribe to our newsletters
மதுரை, 18 அக்டோபர் (ஹி.ச.)
சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாக மதுரை ஆரப்பாளையம் பகுதியில் 18 சித்தர்களின் ஒருவரான சுந்தரானந்தர் சித்தர் கோவிலான பழமையான ஸ்ரீ ஆதி சிவன் திருக்கோவிலில் சனி மகா பிரதோஷம் நடைபெற்றது.
சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீ வில்வனேஸ்வரர் உடனுறை மங்களநாயகி சுவாமிக்கு பால் தயிர் மஞ்சள் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேக வழிபாடுகள் நடைபெற்றன.
இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஓம் நமச்சிவாய கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து உற்சவமூர்த்தியான வில்வனேஸ்வரர் மங்களநாயகி அம்மன் கோவிலில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
தொடர்ந்து சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றன பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Hindusthan Samachar / Durai.J