தூத்துக்குடியில் புதிய கண்காணிப்பு மையத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்
தூத்துக்குடி, 18 அக்டோபர் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நவீன காவல் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் இன்று புதிதாக நிறுவப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தலின் பேரில், நகர உட்
தூத்துக்குடியில் புதிய காவல் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்


தூத்துக்குடி, 18 அக்டோபர் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நவீன காவல் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் இன்று புதிதாக நிறுவப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தலின் பேரில்,

நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சி.மதன் கண்காணிப்பில்,

தூத்துக்குடி நகர காவல் உட்கோட்ட சரகத்தில் குற்றங்களை தடுத்தல் மற்றும் குற்றங்களை விரைவில் கண்டுபிடித்தல் குறித்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறான பணியில், பொதுமக்களின் நலன் சார்ந்த குற்றங்கள் நடவாமல் கண்காணித்தல் மற்றும் குற்றங்களை கண்டுபிடித்தல் பணிகளை திறம்பட செய்திடும் வகையில் கூடுதல் நடவடிக்கையாக தூத்துக்குடி மாநகராட்சியின் அனுமதியுடன் தனியார் நிறுவன பங்களிப்பில் நகர காவல் உட்கோட்ட சரகத்தில் மூன்று கட்டமாக முக்கிய சாலைகள், சந்திப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை கண்காணித்திடும் வகையில் தானாகவே சாலையில் செல்லும் வாகனங்களின் எண்களை பதிவு செய்யும் (யுNPசு) கேமராக்கள் 30 உட்பட மொத்தம் 686 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு, தூத்துக்குடி நகர காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அவைகளில் 430 கண்காணிப்பு கேமராக்கள் 18-10-2025 அன்று முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. அதனைத் தொடர்ந்து இதர கண்காணிப்பு கேமராக்களும் விரைவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது.

மேலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், மிக துல்லியமாக பார்க்கக் கூடிய, சுமார் 30 நாட்கள் சேமிப்பு மற்றும் மின்சாரம் இல்லாமல் பேட்டரிகள் மூலம் மூன்று நாட்கள் வரை செயல்படக்கூடிய திறன்கொண்ட, கண்காணிப்பு கேமராவின் திசையை மாற்றவோ, சேதப்படுத்தவோ முயற்சி செய்தால் எச்சரிக்கை செய்யும் வசதியும் மற்றும் எவ்வகையிலும் துண்டிக்க இயலாத, இடையூறு ஏற்படுத்த இயலாத வகையில் தனிப்பட்ட மின்சாரம் மற்றும் கண்காணிப்பு கேமரா இணைப்பு வழித்தடம் கொண்டவையாகும்.

மேலும், இரவு நேரங்களிலும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை துல்லியமாக பார்க்கும் வகையில் அதி நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் திறன்பட பயிற்சி பெற்ற காவல்துறை குழுவினரால் முக்கிய திருவிழாக்கள், பண்டிகைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பறக்கவிடப்பட்டு, காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேற்படி ஒருங்கிணைந்த நடவடிக்கையின் காரணமாக தூத்துக்குடி நகர பகுதி முழுவதும் காவல் துறையின் முழு கண்காணிப்பில் வருவதுடன், அவைகள் குற்றங்களை தடுத்தல், குற்றங்களை கண்டுபிடித்தல், சட்ட ஒழுங்கை நிலைநாட்டுதல் மற்றும் போக்குவரத்தை சீர்செய்தல் ஆகியவற்றில் காவல்துறையின் நடவடிக்கையில் பேருதவியாக இருக்கும்.

Hindusthan Samachar / vidya.b