தீபாவளி பண்டிகையை கொண்டாட நலத்திட்ட உதவிகள் வழங்கும் இஸ்லாமியர்கள்
ராமநாதபுரம், 18 அக்டோபர் (ஹி.ச.) தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் அருப்புக்கார தெரு பள்ளிவாசலில் வைத்து வசதியற்ற ஏழை இந்து பெண்மணிகளுக்கு தீபாவளி கொண்டாடுவதற்காக பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பரிசு
Muslims Diwali Gifts


ராமநாதபுரம், 18 அக்டோபர் (ஹி.ச.)

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் அருப்புக்கார தெரு பள்ளிவாசலில் வைத்து வசதியற்ற ஏழை இந்து பெண்மணிகளுக்கு தீபாவளி கொண்டாடுவதற்காக பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்த பரிசு தொகுப்பை வாங்க ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

இதில் சேலை, கைலி, மளிகை பொருட்கள், அரிசி போன்றவை இருந்தன.

ஏழை இந்துக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக இஸ்லாமியர்கள் பரிசு தொகுப்பு வழங்கியது மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

Hindusthan Samachar / ANANDHAN