விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்து விவசாயிகள் நலனைக் காத்திடுங்கள் முதல்வர் அவர்களே - நயினார் நாகேந்திரன் கண்டனம்
சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.) திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கும் விளம்பர மாடல் அரசு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, நாகையில் 10 நாட்க
Nayinar


Teeet


சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச.)

திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கும் விளம்பர மாடல் அரசு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

நாகையில் 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் திமுக அரசு காலந்தாழ்த்தி வருவது கண்டனத்திற்குரியது.

மாவட்டம் முழுவதுமுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 15,000 மூட்டைகள் வரை தேங்கி உள்ளதால் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் கூறியிருப்பது ஏற்புடையதல்ல. பருவ மழையையும் தீபாவளிப் பண்டிகையையும் முன்கூட்டியே கணக்கிட்டு, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, உரிய விலையைப் பெற்றுக் கொடுப்பது ஒரு அரசின் கடமை. அதைவிடுத்து, தனது திட்டமின்மையால் கொள்முதல் செய்யாமல், அறுவடை செய்த நெல்மணிகளை மழையில் நனைய விட்டிருப்பது திமுக அரசின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

எனவே, டெல்டாக்காரன் என்று பெருமிதம் கொள்வது எள்ளளவாவது உண்மையென்றால் உடனடியாக போர்க்கால அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்து விவசாயிகள் நலனைக் காத்திடுங்கள் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களே என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ