Enter your Email Address to subscribe to our newsletters
நெல்லை, 18 அக்டோபர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே விட்டிலாபுரம் கோவில்பத்து பகுதியை சேர்ந்தவர் பரமசிவன்.
இவரின் மகன் அருண் செல்வம் (வயது 33).
இவர் செய்துங்கநல்லூரில் சிமெண்டு விற்பனை கடை நடத்தி வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அருண் செல்வத்தின் அண்ணன் கார்த்திக், செய்துங்கநல்லூரை சேர்ந்த இசக்கிமுத்து என்ற போஸ் (35) ஆகியோருக்கு இடையே கார் கண்ணாடி உடைக்கப்பட்ட விவகாரத்தில் முன்விரோதம் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு அருண்செல்வம் தனது நண்பர் செய்துங்கநல்லூர் கஸ்பா வேதக்கோவில் தெருவை சேர்ந்த சாகுல்ஹமீது மகன் ஜெலில் (40) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சிவந்திபட்டி பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, போஸ் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து தனது வண்டியை அருண்செல்வம் மோட்டார் சைக்கிள் மீது மோதவிட்டு அவரை வெட்டிக்கொலை செய்தார்.
ஜெலில் வெட்டுக்காயம் அடைந்தார்.
இதுகுறித்து சிவந்திபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா வழக்குப்பதிவு செய்து போசையும், அவரது கூட்டாளியான ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த ரவுடியான பாண்டி(26) என்பவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏ பிளஸ் ரவுடிகள் பட்டியலில் உள்ள போஸ் தலை மறைவானார்.
இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தனிப்படை போலீசார் அவரை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN