Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 18 அக்டோபர் (ஹி.ச.)
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருப்பதால் மலையடிவார கிராமங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும், முக்கியமாக நரசிபுரம், கெம்பனூர், தொண்டாமுத்தூர், மருதமலை மற்றும் தடாகம் சுற்று வட்டாரத்தில் ஒரு ஆண் காட்டு யானை ஊருக்குள் அடிக்கடி வந்து கொண்டு இருந்தது.
விலை நிலங்கள், வீடுகள் சேதப்படுத்துவதுடன் அவ்வப் போது மனிதர்களையும் தாக்கி கொள்வதாக புகார் எழுந்தது. அந்த யானையை உள்ளூர் மக்கள் ரோலக்ஸ் என்று பெயரிட்டனர்.
விவசாயிகள் கோரிக்கையால் ரோலக்ஸ் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனதுறையினர் முடிவு செய்தனர். இதற்காக வனத் துறையினர் பொள்ளாச்சி, டாப்சிலிப்பில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரசிம்மன், முத்து என்கின்ற இரண்டு கும்கி யானைகள் அழைத்து வந்து இருந்தனர்.
வன மருத்துவர்கள் விஜயராகவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தார்.
அப்பொழுது அந்த யானை அவரை தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிகழ்வு காரணமாக ஆபரேஷன் ரோலக்ஸ் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கும்கி யானைகள் நரசிம்மன் முத்து ஆகிய இரண்டு யானைகளுக்கும் திடீரென மதம் பிடித்தது. இதனால் அந்த யானைகள் பாதுகாப்புக் கருதி அந்த இரண்டு யானைகளும் மீண்டும் டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டன.
அவற்றிற்கு பதிலாக டாப்சிலிப்பில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை கோவை அழைத்து வந்தனர்.
இது குறித்து வனத்துறையினர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறும் போது,
ரோலக்ஸ் என்று அழைக்கப்படும் ஆண் காட்டு யானை தொண்டாமுத்தூர் வனப் பகுதியில் காட்டை விட்டு அடிக்கடி வெளியே வந்து பயிர் சேதாரம் மற்றும் உயிர் சேதப்படுத்தி வந்ததாகவும், இந்த யானையை பிடிக்க பல்வேறு கோரிக்கைகள் அங்கு இருக்கும் மக்கள் மூலம் வைக்கப்பட்டது.
இந்த யானையை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதில் இந்த யானை தினமும் இரவு நேரங்களில் காட்டை விட்டு வெளியே வந்த வண்ணம் இருந்தது.
கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி தலைமை வன உயிரின காப்பாளர் உத்தரவினங்க இந்த யானையைப் பிடிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் இந்த யானை மிகவும் சென்சிட்டிவாக இருந்தது. அதாவது ஒரு சின்ன சத்தம் கேட்டாலோ அல்லது வெளிச்சம் கண்டாலோ உடனே ஓடிவிடும் நிலையில் இருந்தது.
செப்டம்பர் 19 ஆம் தேதி அன்று யானையை பிடிக்கும் பணியில் இருந்த பொள்ளாச்சி வன கால்நடை மருத்துவர், விஜயராகவனை இந்த யானை தாக்கியது.
பின்னர் வேறு ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு அந்த யானையை 25 தினங்கள் தொடர்ந்து கண்காணிப்பு செய்து, அந்த யானை காட்டை விட்டு எந்த வழியாக வருகிறது, எந்தெந்த விவசாய நிலங்களுக்கு சென்று மீண்டும் காட்டுக்குள் திரும்புகிறது என்று சரியாக கணிக்கப்பட்டு பின் யானையை மீண்டும் பிடிக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (17.10.25) அதிகாலை 2 மணி அளவில் யானைக்கு மயக்க மருந்து செலுத்தி யானையை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
பின்னர் மூன்று கும்கிகள் (கபில்தேவ், வாசிம் மற்றும் பொம்மன்) ஆகிய மூன்று கும்கி யானைகள் உதவியுடன் தற்போது லாரியில் ஏற்றப்பட்டு பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் உள்ள வரகளியார் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இவ்வாறு செய்து குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Hindusthan Samachar / V.srini Vasan