பிரதமர் மோடி தந்தேராஸ் பண்டிகை வாழ்த்து
புதுடெல்லி, 18 அக்டோபர் (ஹி.ச.) வட இந்தியாவில் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தந்தேரஸ் பண்டிகை என்பது தீபாவளி கொண்டாட்டங்களின் தொடக்கத்தை குறிக்கும் ஒரு முக்கிய இந்து பண்டிகையாகும். செல்வம் மற்றும் செழிப்புக்கான தெய்வமான லட்சுமி தேவிய
பிரதமர் மோடி தந்தேராஸ் பண்டிகை வாழ்த்து


புதுடெல்லி, 18 அக்டோபர் (ஹி.ச.)

வட இந்தியாவில் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தந்தேரஸ் பண்டிகை என்பது தீபாவளி கொண்டாட்டங்களின் தொடக்கத்தை குறிக்கும் ஒரு முக்கிய இந்து பண்டிகையாகும். செல்வம் மற்றும் செழிப்புக்கான தெய்வமான லட்சுமி தேவியை வணங்கி இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு தந்தேரஸ் இன்று(அக்.18) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,:

நாட்டில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தந்தேராஸ் பண்டிகை வாழ்த்துகள். இந்த புனிதமான சந்தர்ப்பத்தில் அனைவரின் மகிழ்ச்சி, வளர்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன். தன்வந்திரி கடவுள் அனைவருக்கும் நிறைவான ஆசிர்வாதங்களை வழங்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அனைவர் வாழ்விலும், மகிழ்ச்சி, செழிப்பு கிடைக்க பகவான் தன்வந்தரியை பிரார்த்திக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b