Enter your Email Address to subscribe to our newsletters
புதுச்சேரி, 18 அக்டோபர் (ஹி.ச.)
வரும் திங்கட்கிழமை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அதனை முன்னிட்டு புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
.அதில்,
நாம் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளிக்கு என தனியிடம் உண்டு. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மகிழ்ச்சி அள்ளித்தரும் திருநாள் தீபாவளி.
சாதி, மதம், இனம், மொழி என்ற பேதமின்றி,
சமத்துவத்தின் அடையாளமாக தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது.
பஞ்சாலைகள், அரசின் ஏற்பு நிறுவனங்கள், என தொழில் வளம் மிகுந்த புதுச்சேரி மாநிலத்தில், அதில் பணியாற்றிய பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடிய காலம் இப்பொழுது இல்லை.
பஞ்சாலைகளும், அரசின் ஏற்பு நிறுவனங்களும், தனியார் தொழிற்சாலைகளும் வரிசையாக மூடப்பட்டு தற்போது பழைய எழுச்சி இன்றி தீபாவளி கொண்டாடப்பட்டு வருவது நமக்கெல்லாம் வருத்தமே. விரைவில் இதனை மீட்டெடுக்கும் காலம் வரும் என்று புதுச்சேரி மக்களுக்கு இந்த நன்னாளில் உறுதி அளிக்கிறேன்.
சர்வாதிகாரம் எனும் நரகாசுரனை ஜனநாயகம் வீழ்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை. புதுச்சேரி மாநில மக்கள் அனைவரின் இல்லங்களில் வளம் நிறைந்திடவும், உள்ளங்களில் மகிழ்ச்சி மத்தாப்பாய் பொங்கிடவும், என் மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN