Enter your Email Address to subscribe to our newsletters
புதுச்சேரி, 18 அக்டோபர் (ஹி.ச.)
பொதுமக்கள் அனைவரும் நாளை மறுநாள்(அக்.20) தீபாவளி பண்டிகையை கொண்டாட தயார் ஆகி வருகின்றனர்.
தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட பொதுமக்கள் வெளியூரிலிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
இதையடுத்து தீபாவளியை கொண்டாடிவிட்டு மீண்டும் திரும்புவோரின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் தீபாவளிக்கு மறுநாள்(21ம் தேதி) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 25ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை நாளாக அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு தீபாவளிக்கு மறுநாள்
(21ம் தேதி) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b