மாட்டு சந்தையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு 2 கோடிக்கு மேல் மாடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி
ஆரணி, 18 அக்டோபர் (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கேளூர், தேப்பனந்தல் மாட்டு சந்தையில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று மாட்டு சந்தையில் மாடுகள் விற்பனையானது நடைபெற்று வருகிறது. இந்த தேப்பனந்தல் மாட்டு சந்தையில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வே
சந்தை


ஆரணி, 18 அக்டோபர் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கேளூர், தேப்பனந்தல் மாட்டு சந்தையில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று மாட்டு சந்தையில் மாடுகள் விற்பனையானது நடைபெற்று வருகிறது.

இந்த தேப்பனந்தல் மாட்டு சந்தையில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,

ஆந்திரா, கர்நாடகா, போன்ற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாளை மறுதினம் தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட உள்ள நிலையில் கேளூர் தேப்பணந்தல் மாட்டு சந்தையில் மாடுகள் விற்பனை சுமார் 2 கோடி அளவில் நடைபெற்றதாக வியாபாரிகள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த மாட்டு சந்தையில் காளை மாடுகள், கறவை மாடுகள், ஜெசி, கிராஸ், போன்ற பல்வேறு வகையான மாடுகள் விற்பனை செய்யப்படுவதால்,

வியாபாரிகள் மற்றும் விவசாய பெருமக்கள் விற்பனை செய்தும் மற்றும் மாடுகளை வாங்கியும் செல்கின்றனர்.

Hindusthan Samachar / Durai.J