Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 18 அக்டோபர் (ஹி.ச)
செங்கல்பட்டில் திராவிட கழகம் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் திராவிடர் கழகம் சார்பில் உருவாகி வரும் பெரியார் உலகம் அமைக்கும் பணிக்காக தி.மு.க சார்பில், தி.மு.க நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், இன்று
(அக் 18) சென்னை பெரியார் திடலில் திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணியிடம் ரூ.1 கோடியே 70 லட்சத்து 26 ஆயிரத்திற்கான காசோலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
இது தொடர்பான புகைப்படங்களை இன்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது,
தமிழுலகம் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெற உழைத்திட்ட தந்தை பெரியாரின் புகழ் சொல்லும் வகையில் திருச்சி - சிறுகனூரில் அமையும் “பெரியார் உலக”த்துக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமான ரூ. 1,70,20,000-ஐ தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கே. வீரமணி அவர்களிடம் வழங்கினேன்!
பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்!
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b