தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 73 செ.மீ. மழைப்பொழிவு பதிவு - அருவிகள் மற்றும் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு
தென்காசி, 18 அக்டோபர் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் கனமழையானது கொட்டித் தீர்த்த நிலையில், இந்த மழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது. குறிப்ப
Heavy Rain


தென்காசி, 18 அக்டோபர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் கனமழையானது கொட்டித் தீர்த்த நிலையில், இந்த மழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசி நகரப் பகுதியில் 99 மில்லிமீட்டர் மழைப்பொழிவும், ஆய்க்குடி சுற்றுவட்டார பகுதியில் 96 மில்லி மீட்டர் மழை பொழிவும், செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் 96.40 மில்லி மீட்டர் மழைப்பொழிவும், ராமநதி அணை பகுதியில் 86 மில்லிமீட்டர் மழைப்பொழியும், கடனாநதி அணைப் பகுதியில் 80 மில்லி மீட்டர் மழைப்பொழிவும், குண்டாறு அணை பகுதியில் 88 மில்லிமீட்டர் மழைப்பொழிவு, சிவகிரி சுற்றுவட்டார பகுதியில் 75 மில்லி மீட்டர் மழைப்பொழிவும் என ஒட்டுமொத்தமாக தென்காசி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 729.70 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

குறிப்பாக, சராசரியாக 72.97 சென்டிமீட்டர் மழை பொழிவானது நேற்று ஒரே நாளில் பதிவாகியுள்ள நிலையில், இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றுப்படுகைகள், நீர் நிலைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN