சிவகாசியில் இறுதிக்கட்ட பட்டாசு விற்பனை - பேன்சி வெடி, அணுகுண்டு, கம்பி மத்தாப்பு உள்ளிட்ட வெடிகளுக்கு கடும் தட்டுப்பாடு
விருதுநகர், 18 அக்டோபர் (ஹி.ச.) குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் இறுதி கட்ட பட்டாசு விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகாசி பகுதியில் உள்ள 4 ஆயிரம் கடைகளில் பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்
பட்டாசு


விருதுநகர், 18 அக்டோபர் (ஹி.ச.)

குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் இறுதி கட்ட பட்டாசு விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிவகாசி பகுதியில் உள்ள 4 ஆயிரம் கடைகளில் பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் வெளியூர்களுக்கு செல்லும் பார்சல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே பல்வேறு வெளி மாவட்டங்களிலிருந்து பட்டாசு வாங்க வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.

இதனிடையே சிவகாசி பகுதியில் பெய்து வரும் அடை மழை காரணமாக பட்டாசு விற்பனை பாதித்துள்ளது.

மேலும் மழை காரணமாக பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் பேன்சி வெடி, அணுகுண்டு, கம்பி மத்தாப்பு உள்ளிட்ட பட்டாசுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு சில பட்டாசு கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் பட்டாசு விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM