இந்த தீபாவளியில் முதன்மையானது மக்களை சீரழிக்கும் தி.மு.க ஆட்சிக்கு முடிவுரை எழுதுவது மட்டும் தான் - அன்புமணி ராமதாஸ்
சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.) அன்புமணி இராமதாஸ் அவர்களின் தீப ஒளித் திருநாள் வாழ்த்து,இருள் இன்றுடன் விலகட்டும், மகிழ்ச்சி ஒளி எந்நாளும் பரவட்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்
Anbumani


சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.)

அன்புமணி இராமதாஸ் அவர்களின் தீப ஒளித் திருநாள் வாழ்த்து,இருள் இன்றுடன் விலகட்டும்,

மகிழ்ச்சி ஒளி எந்நாளும் பரவட்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

இருளை விலக்கி, ஒளி கொடுக்க வரும் தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை; அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம் உண்டு. தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. இது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும்.

தீமையை நன்மை அழித்ததன் கொண்டாட்டம் தான் தீப ஒளித் திருநாள் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் இந்த ஆண்டு தீப ஒளித் திருநாள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒளி கிடைக்க அழிக்கப்பட வேண்டிய தீமைகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் முதன்மையானது மக்களை சீரழிக்கும் தி.மு.க ஆட்சிக்கு முடிவுரை எழுதுவது மட்டும் தான்.

விலைவாசி உயர்வு, வரிக்கொடுமை, வேலைவாய்ப்பின்மை, சட்டம் & ஒழுங்கு சீர்குலைவு என அழிக்கப்பட வேண்டிய சக்திகள் ஏராளமாக உள்ளன. அவை அனைத்தையும் அகற்றுவதற்கான தீர்வு உங்களின் கைவிரல் நுனியில் தான் உள்ளன. அதை ஒருமுறை செய்தால் தமிழ்நாட்டில் இருள் இன்றுடன் முடிவுக்கு வரும்; மகிழ்ச்சி நிரந்தரமாக நிலை கொள்ளும். அதை செய்வதன் மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்.

போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ