பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
விழுப்புரம், 19 அக்டோபர் (ஹி.ச.) அண்மைக்காலமாக சென்னையில் ஒரே வாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இல்லம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வீடு, சுங்கத்துறை அலுவலகம், ஜிஎஸ்டி அலுவலகம் என மாறி மாறி 8 முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விட
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்


விழுப்புரம், 19 அக்டோபர் (ஹி.ச.)

அண்மைக்காலமாக சென்னையில் ஒரே வாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இல்லம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வீடு, சுங்கத்துறை அலுவலகம், ஜிஎஸ்டி அலுவலகம் என மாறி மாறி 8 முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டது.

மிரட்டல் விடுக்கும் நபர்களை பிடிக்க முடியாமல் போலிசார் திணறி வருகின்றனர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் தைலாபுரம் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தொலைபேசியில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபரை, போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b