Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.)
சென்னையில் இருந்து சுமார் 20லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், மாநகரத்தின் பிரதான சாலைகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
நாளை தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்ததால் சென்னையின் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
தொடர் விடுமுறை என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை முதலே மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல செல்ல தொடங்கினர், சென்னையில் இருந்து பேருந்துகள், ரயில்கள் மற்றும் தங்களுடைய சொந்த வாகனங்கள் மூலம் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
அதன்படி சுமார் 10லட்சம் பேர் சிறப்பு ரயில்கள் மூலமும், சுமார் 6.5 லட்சம் பேர் அரசு பேருந்து மூலமும், 2 லட்சம் பேர் வரை ஆம்னி பேருந்துகள் மூலமும், 2 லட்சம் பேர் சொந்த வாகனங்களிலும் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஜிஎஸ்டி சாலை என அனைத்து சாலைகளும் வாகனங்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ