Enter your Email Address to subscribe to our newsletters
தூத்துக்குடி, 19 அக்டோபர் (ஹி.ச.)
தூத்துக்குடி துறைமுகத்திற்கு சீன துறைமுகமான நிங்பேவில் இருந்து வந்த கன்டெய்னர்கள் ஏற்றப்பட்ட கப்பலில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு வந்த 2 கன்டெய்னர்களில் என்ஜினீயரிங் உபகரணங்கள், சிறிய தட்டையான டிராலிகள் இருப்பதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த கன்டெய்னர்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திறந்து பார்த்து சோதனை செய்த போது சிலிக்கன் சீலென்ட்கன் எனப்படும் தகரம், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் ஒட்டுவதற்கு பயன்படும் உபகரணங்களும், அதற்கான சிலிக்கான் பசை போன்ற பொருட்களும் இருந்தன.
மேலும் அவற்றுக்கு பின்னே சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள 8,400 அட்டைப் பெட்டிகளில் சீன பட்டாசுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. கன்டெய்னர்களில் இருந்த பொருட்களுடன் சீன பட்டாசுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த மைக்கேல் ஜேக்கப் ஜெயசேகரன், சூசை மாணிக்கம் ஜெயேந்திரன், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர்கள் விகாஷ் பட்டேஷ்வர் தவுபி, தசரத் மச்சீந்தரா கோக்கரே ஆகிய 4 பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
Hindusthan Samachar / vidya.b