ஆதரவற்ற பள்ளி மாணவர்கள், மற்றும் முதியவர்களுக்கு,பட்டாசு மற்றும் புத்தாடைகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து
மதுரை, 19 அக்டோபர் (ஹி.ச.) மதுரை தனக்கன்குளம் பகுதியில் தனது குடும்பத்தினரோடு வசித்து வருபவர் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து கொரோனா காலம் தொட்டு தான் வாழக்கூடிய பகுதிகளில் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆதரவற்ற மாணவர்கள் உள்
மதுரை முத்து


மதுரை, 19 அக்டோபர் (ஹி.ச.)

மதுரை தனக்கன்குளம் பகுதியில் தனது குடும்பத்தினரோடு வசித்து வருபவர் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து கொரோனா காலம் தொட்டு தான் வாழக்கூடிய பகுதிகளில் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆதரவற்ற மாணவர்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று தனது வீட்டின் அருகே தனது மணைவி மற்றும் மகன் மகளோடு இணைந்து சுமார் 100 நபர்களுக்கு புத்தாடை மற்றும் பட்டாசுகள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

குறிப்பாக மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களுக்கு பயிலக்கூடிய வகையில் நன்னெறி கதைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய கதைகள் அடங்கிய புத்தகங்களை தீபாவளி பரிசாக அவர்களுக்கு வழங்கினார்.

முன்னதாக இந்த நிகழ்வுக்கு வருகை தந்த முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு தேநீர் மற்றும் ஸ்னாக்ஸ் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து மதுரை முத்து பேசுகையில்,

எத்தனையோ குடும்பங்களில் தீபாவளி பண்டிகை என்பது புத்தாடைகள் கூட எடுக்க முடியாமல் சிரமப்பட்டு இருக்கிறார்கள் நான் வாழ்ந்த கிராமத்தில் கூட இன்றளவும் அந்த நிலை இருக்கத்தான் செய்கிறது.

அதை கருத்தில் கொண்டு நான் தற்போது வசிக்கக்கூடிய இந்த பகுதியைச் சேர்ந்த ஆதரவற்ற மற்றும் மிகவும் நலிந்த நிலையில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தீபாவளியின் போது அவர்கள் புத்தாடை உடுத்தக்கூடிய வகையில் சேலை பட்டாசு உள்ளிட்டவைகளை வழங்கி இருக்கின்றோம்.

அதே போன்று மாணவ மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கியதோடு மட்டுமல்லாது இதை பார்க்கக் கூடியவர்களும் தங்களால் முயன்றளவு தீபாவளி திருநாள் என்று தாங்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் நலிந்த நிலையில் இருப்பவர்களுக்கும் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களுக்கும் உதவிகள் செய்ய வேண்டும் என்பதை எனது வேண்டுகோளாக கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

மனித நேயத்தோடு

தனது பிறந்த நாள் மற்றும் பொங்கல் இப்படியாக ஒவ்வொரு விழாக்களின் போதும் தான் வசிக்கக்கூடிய பகுதி மக்களுக்கு தொடர்ந்து மதுரை முத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / Durai.J