தீபாவளியை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் மதுரை விமான நிலையம்
மதுரை, 19 அக்டோபர் (ஹி.ச.) மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு விமான செய்திகள் துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு விமான சேவையும் இயங்கி வருகிறது. இந்தநிலையில் மதுரை விமான நிலையத்தில் சமீபத
மதுரை


மதுரை, 19 அக்டோபர் (ஹி.ச.)

மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு விமான செய்திகள் துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு விமான சேவையும் இயங்கி வருகிறது.

இந்தநிலையில் மதுரை விமான நிலையத்தில் சமீபத்தில் 24 மணி நேரம் செயல்படும் என அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மதுரை விமான நிலையத்தில் குடியரசு தினம் சுதந்திர தினத்தன்று விமான நிலையம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.

இந்த நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் பயணிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் விமான நிலையம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலைய முகப்பில் தீபாவளி வாழ்த்துக்கள் என வண்ண விளக்குகளால் ஒளிர விடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / Durai.J