கோவையில் மன ஆரோக்கியம் நல் வாழ்வு என நடைபெற்ற தீபாவளி பண்டிகை விழா
கோவை, 19 அக்டோபர் (ஹி.ச.) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242-சி மாவட்டத்தின் நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பாக
Diwali festival celebration held in Coimbatore focusing on mental health and well-being


Diwali festival celebration held in Coimbatore focusing on mental health and well-being


கோவை, 19 அக்டோபர் (ஹி.ச.)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242-சி மாவட்டத்தின் நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோ ஓட்டினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா

நேரு நகர் பகுதியில் உள்ள ஹரீஷ் இல்லத்தில் நடைபெற்றது.

முன்னாள் தலைவர் லயன் பாஸ்கர் மற்றும் லயன் பரிமளா பாஸ்கர் தலைமையில்,நடைபெற்ற நிகழ்ச்சியில், லயன் ஹரீஷ் பாஸ்கர் மற்றும் GST ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் ஆளுநர் லயன். ராம்குமார், GLT ஒருங்கிணைப்பாளர் லயன் பாஸ்கர், வட்டாரத் தலைவர் லயன் சுப்பு செந்தில்குமார், லயன் மோகன்ராஜ்,நேரு நகர் சங்கத் தலைவர் லயன் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சங்க தலைவர்கள் லயன் நந்தகுமார், லயன் லோகநாதன், செயலாளர்கள் லயன் பொறியாளர் தேஜஸ்வினி செந்தில்குமார், லயன் திவ்யதர்ஷினி ஹரீஷ், கோவிந்தராஜ், திவாகர்,லயன் கிரீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டு புத்தாடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பெற்று கொண்டனர்.

Hindusthan Samachar / V.srini Vasan