Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச)
கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லவ் டுடே படத்தை இயக்கி நாயகனாக நடித்தார்.
அந்த படமும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
அதனை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்தார் அந்த படமும் ரூ.100 கோடி வசூலை குவித்தது.
இந்த நிலையில் அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ நடித்து தீபாவளியை ஒட்டி கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான படம்தான் டியூட்.
இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
இன்றைய தலைமுறையினரை கவரும் வகையில் பல காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளதால் படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள டியூட் படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார்.
இந்த படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ