கன மழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் அறிவியல் குளிக்க தடை
கோவை, 19 அக்டோபர் (ஹி.ச.) கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட கோவை குற்றாலம்
Due to heavy rain, a flood has occurred at the Coimbatore Courtallam waterfalls, and tourists have been prohibited from bathing for safety reasons.


கோவை, 19 அக்டோபர் (ஹி.ச.)

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரங்களில் கன மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட கோவை குற்றாலம் அருவியில் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இதனால், பொதுமக்கள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்படுவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விடுமுறை நாட்கள் என்பதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வரும் நிலையில், வனத் துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து, கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,

கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் கொடுக்கப்பட்டதாலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பொது மக்கள் குளிக்க அனுமதி மறுக்கபட்டு உள்ளது.

மேலும் பண்டிகை காலம் என்பதால் பொது மக்கள் பார்வைக்கு மட்டும் திறக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Hindusthan Samachar / V.srini Vasan