Enter your Email Address to subscribe to our newsletters
பெர்த்,19 அக்டோபர் (ஹி.ச.)
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டியில் விளையாட உள்ளது.
இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது.
டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 7 மாத இடைவெளிக்கு பிறகு சர்வதேச போட்டிக்கு களம் திரும்புகின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடர் தொடர்பாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறுகையில்,
எனது கிரிக்கெட் பயணத்தில் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு எதிராக நிறைய விளையாடும் பாக்கியம் கிடைத்தது. அவர்கள் இந்த விளையாட்டின் ஜாம்பவான்கள். விராட் கோலி ஒரு நாள் போட்டியில் இலக்கை விரட்டிபிடிப்பதில் சிறந்தவர். டிக்கெட் விற்பனையை பார்த்தாலே அவர்களது ஆட்டத்தை பார்க்க நிறைய ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள் என்பது தெரியும். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மைதானம் நிரம்பி வழிவதை பார்ப்பது எங்கள் அணிக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். இந்த தொடரில் அதிக ஸ்கோர் குவிக்கப்படும் என்று நம்புகிறேன்.
முதல் 10 ஓவர் இரு அணிகளுக்கும் சவால் நிறைந்ததாக இருக்கும். இதனை பொறுத்தே வெற்றி, தோல்வி அமையலாம்.
‘ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான அணிக்கு நான் தேர்வு செய்யப்படுவேனா? என்று கேட்கிறீர்கள். என்னிடம் முதலாவது டெஸ்டின் முதல் இரு நாட்களுக்குரிய டிக்கெட்டுகள் உள்ளன.
என்னுடைய மனைவியிடம் இன்னும் கேட்கவில்லை. அது குறித்து அவ்வளவு தான் யோசித்து இருக்கிறேன். என்று சிரித்தபடி சொன்னார்.
Hindusthan Samachar / JANAKI RAM