கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை - கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அறிவிப்பு
கடலூர், 19 அக்டோபர் (ஹி.ச.) அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தீபாவளிக்கு மறுநாள் மேலும் காற்றழுத்தம் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து
கனமழை காரணமாக  மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை -  கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அறிவிப்பு


கடலூர், 19 அக்டோபர் (ஹி.ச.)

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தீபாவளிக்கு மறுநாள் மேலும் காற்றழுத்தம் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

இன்று முதல் 22ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

மேலும் மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடலோர பகுதிகளில் மீன்வளத்துறையினர் மற்றும் காவல்துறையினர்

ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b