விரைவில் நீதிபதி அஜய் ரஸ்தோகி குழுவை சந்தித்து கரூரில் பா.ஜ. சேகரித்த விபரங்களை சமர்ப்பிக்க உள்ள ஹேமமாலினி
புதுடெல்லி,19 அக்டோபர் (ஹி.ச.) கரூர் விவகாரம் குறித்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, அஜய் ரஸ்தோகி விசாரணையைக் கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.சார்பில் ஹேமமாலினி தலைமையில், எம்.
விரைவில் நீதிபதி அஜய் ரஸ்தோகி குழுவை சந்தித்து கரூரில் பா.ஜ.,  சேகரித்த விபரங்களை சமர்ப்பிக்க உள்ள ஹேமமாலினி.


புதுடெல்லி,19 அக்டோபர் (ஹி.ச.)

கரூர் விவகாரம் குறித்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, அஜய் ரஸ்தோகி விசாரணையைக் கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

பா.ஜ.சார்பில் ஹேமமாலினி தலைமையில், எம். பி.,க்கள் குழு கரூர் 'விசிட்' செய்து பாதிக்கப்பட்ட குடும் பங்களை சந்தித்து விசாரணை நடத்தியது; இது குறித்து கட்சி தலைமைக்கு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளார் ஹேமமாலினி.

விரைவில், நீதிபதி அஜய் ரஸ்தோகி குழு வையும் சந்தித்து, கரூரில் பா.ஜ., குழு சந்தித்து சேகரித்த, விபரங்களை சமர்ப்பிக்க உள்ளாராம் ஹேமமாலினி.

பார்லிமென்ட்டின் குளிர்கால கூட் டத்தொடரில், கரூர் விவகாரம் நிச்சயம் எழுப்பப்படும் என சொல்லப்படுகிறது. பா.ஜ., சார்பில் எம்.பி., ஹேமமாலினி பேசுவார் என, கட்சி ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாம். தமிழில் தான் அவர் பேசப்போகிறாராம்.

பார்லிமென்ட்டில் விஜய்க்கு ஆதரவாக பேச, எம்.பி.,க்கள் யாரும் இல்லாத நிலையில், ஹேமமாலினி மறைமுக ஆதரவு தருவதுடன், தி.மு.க.,வை கடுமையாக விமர்சிக்க உள்ளாராம். இதற்கு பதிலடி தர, 'காங்கிரஸ் தரப்பில் ஜோதிமணி எம்.பி., தயாராக உள்ளார்' என சொல்லப்படுகிறது.

ஒரு வழக்கை சி.பி.ஐ., விசாரணை செய்தாலோ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் விசாரணை செய்து கொண்டிருந்தாலோ இந்த விவகாரம் குறித்து பார்லிமென்ட்டில் விவாதிக்கக் கூடாது' என்பது நடைமுறை. எனினும், 'அந்த விவகாரம் சார்ந்த பொதுக் கொள்கை குறித்து பொதுவாகப் பேசலாம்.

ஆனால், விசாரணையின் உண்மை விபரங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் மீது அலசல் வேண்டாம்' என, வழிகாட்டப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM