எம்டி (சித்தா) மற்றும் எம்டி (யுனானி) பட்டமேற்படிப்பில் சேர அக் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - ஓமியோபதித்துறை அறிவிப்பு
சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.) இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ கல்லூரியில் கல்வியாண்டில் எம்டி (சித்தா) மற்றும் எம்டி (யுனானி) பட்டமேற்படிப்பில் சேர அக் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய ம
எம்டி (சித்தா) மற்றும் எம்டி (யுனானி) பட்டமேற்படிப்பில் சேர அக் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - ஓமியோபதித்துறை  அறிவிப்பு


சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.)

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ கல்லூரியில் கல்வியாண்டில் எம்டி (சித்தா) மற்றும் எம்டி (யுனானி) பட்டமேற்படிப்பில் சேர அக் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ கல்லூரியில் 2025-2026ம் கல்வியாண்டில் எம்டி (சித்தா) மற்றும் எம்டி (யுனானி) பட்டமேற்படிப்பு சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் தகுதியுள்ளவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

* இதற்கான தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

* இணையவழியில் மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்ப கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in.,

www.tnayushselection.org. என்ற வலைதளங்களில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.

* விண்ணப்பிக்கும் முன் தகவல் தொகுப்பேட்டினை முழுமையாக படித்து சரியான தகவல்களை பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/JPEG வடிவில் பதிவேற்றவும்.

* விண்ணப்ப கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

கல்லூரிகளின் விவரங்கள்: சென்னை, அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பானையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி, அரசு யுனானி மருத்துவக் கல்லூரி, சென்னை.

* அரசு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும், இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு வருகிற 23ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b