Enter your Email Address to subscribe to our newsletters
தஞ்சாவூர், 19 அக்டோபர் (ஹி.ச.)
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வருவாய் கட்டுப்பாட்டில் உள்ள ஒக்கநாடு கீழையூர் வள்ளுவர் நகரில் வசித்து வருபவர் பத்மாவதி, கூரை வீட்டில் வாழ்ந்து வரும் விவசாய கூலித் தொழிலாளியான இவருக்கு நேற்று பெய்த கன மழை காரணமாக வீட்டின் சுவர் திடீரென நேற்று மாலை இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் பத்மாவதி மயிரிழையில் உயிர் தப்பினார்.
அவரது மகன் வெளி மாநிலத்தில் இருப்பதால் பத்மாவதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
தகவல் அறிந்த ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ், மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து பத்மாவதிக்கு அரசு சார்பில் உதவி செய்தனர்.
தொடரும் கனமழையால்
இப்பகுதியில் வீடுகள் பாதிக்கும் நிலை அதிக அளவில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / Durai.J