களக்காடு தலையணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை
நெல்லை, 19 அக்டோபர் (ஹி.ச.) நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பாபநாசம் சேர்வலாறு மணிமுத்தாறு ஆகிய அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேற்கு
Kalakkadu Thalaiyanai


நெல்லை, 19 அக்டோபர் (ஹி.ச.)

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பாபநாசம் சேர்வலாறு மணிமுத்தாறு ஆகிய அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கனமழை காரணமாக களக்காட்டில் உள்ள தலையணைப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக களக்காடு தலையணை பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. இன்று களக்காடு தலையணை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு தண்ணீர் ஓடுவதால் தண்ணீர் வேகம் அதிகமாக இருப்பதன் காரணமாகவும் சுற்றுலா பயன்கள் யாரும் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.

மேலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்த பிறகு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN