Enter your Email Address to subscribe to our newsletters
கரூர், 19 அக்டோபர் (ஹி.ச.)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் ஜவகர் பஜார் பகுதியை சுற்றியுள்ள சிவன் கோவில் சாலை, லாரி மேடு, ஜவகர் பஜார் ஆகிய பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக சிறு வியாபாரிகள் துணிக்கடை, உள்ளாடை விற்பனை, பேன்சி பொருட்கள் விற்பனை செய்யும் பல்வேறு தரைக் கடைகள் அமைப்பது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் தரைக்கடை அமைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் கடந்த வாரம் அனுமதி மறுத்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து ஜவகர் பஜார் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளை அப்புறப்படுத்த கரூர் நகர காவல் துறையினர் கெடுபிடி விதித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட முயன்ற கேரளா, கர்நாடகா, வடமாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தரைக்கடை வியாபாரிகள் 30 பெண்கள் உட்பட சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் தள்ளுவண்டிகள் மாநகராட்சி வாகனத்தில் பறிமுதல் செய்து எடுத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீபாவளி விற்பனைக்காக கடன் வாங்கி தரைக்கடைகள் அமைத்து, எங்கள் வாழ்வாதாரத்திற்காக வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
ஜவகர் பஜார் பகுதியில் பெரிய கடைகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் சிறு வியாபாரிகளான எங்களை கடைகளை எடுக்கச் சொல்லி கெடுபிடி விதிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினர்.
Hindusthan Samachar / ANANDHAN