நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சென்னை திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு
சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.) நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சென்னை திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், எல்லாவற்றிற்கும் நீத
Seeman


சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.)

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சென்னை திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,

எல்லாவற்றிற்கும் நீதிமன்றம் சென்றால்,

சட்டமன்றமும் பாராளுமன்றமும் பல்லாங்குழி விளையாட வா.? என பேசியிருந்தார்.

இதன்பின் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் சார்லஸ் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது திருமங்கலம் போலீசார் சீமான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ