கோத்தகிரியில் பள்ளத்தில் கவிழ்ந்து அந்தரத்தில் தொங்கிய பேருந்து -அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்
நீலகிரி, 19 அக்டோபர் (ஹி.ச.) நீலகிரி மாவட்டத்திற்கு அதிகமான கேரளா சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளுக்கு சென்று சுற்றுலா தலங்களை காண செல்கின்றனர். இந்த நிலையில் கோத்தகி
accident


நீலகிரி, 19 அக்டோபர் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டத்திற்கு அதிகமான கேரளா சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளுக்கு சென்று சுற்றுலா தலங்களை காண செல்கின்றனர்.

இந்த நிலையில் கோத்தகிரி அருகே மரளகம்பை பகுதியில் கேரள மாநில சுற்றுலா பயணிகள் மினி பேருந்து மூலம் சுற்றுலா வந்தனர்.

அப்போது மினி பேருந்து மேடான பகுதியில் ஏற முடியாமல் போனதால் ஓட்டுநர் பேருந்தில் இருந்தவர்களை இறங்கச் சொல்லி உள்ளார் .

பின்பு மெதுவாக வாகனத்தை பின்னோக்கி எடுக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

உடனடியாக ஓட்டுநர் கீழே குதித்து தப்பித்தார். அனைவரும் பேருந்தில் இருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்தனர்.

கேரள மாநில சுற்றுலா பேருந்து சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் மோதி தேயிலைத் தோட்டத்திற்குள் விழுந்து அந்தரத்தில் தொங்கியபடி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN