Enter your Email Address to subscribe to our newsletters
நீலகிரி, 19 அக்டோபர் (ஹி.ச.)
சர்வதேச சுற்றுலா தலமான, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலை ரயில் உள்ளது.
1898ம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை மலை ரயில் இயக்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை நீராவி இஞ்சின் வாயிலாக மலை ரயில் இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில்,மலை ரயிலின், 117வது தினம் ஊட்டி ரயில் நிலையத்தில் அக் 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தொடங்கிய வடகிழக்கு பருவமழை நீலகிரியிலும் தீவிரமடைந்துள்ளது.
இதனால் சாலைகள் மற்றும் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
தொடர் கனமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையேயான மலைரெயில் பாதை தண்டவாளத்தில் 10 இடங்களில் மண் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்தன. இதில் ரன்னிமேடு ரெயில் நிலைய பகுதியில் தண்டவாளம் தெரியாத அளவுக்கு மண் சரிந்து காணப்பட்டது. தகவல் அறிந்ததும் மரங்கள் மற்றும் மண் அகற்றும் பணி நடைபெற்றது. இதன்காரணமாக மலை ரெயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக ஊட்டி வந்தது.
இந்த நிலையில், கனமழை காரணமாக ஹில்குரோவ் - அடர்லி இடயே தண்டவாளத்தில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால்
மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையேயான மலை ரெயில் இன்று
(அக் 19) சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான மலை ரெயில் மற்றும் விடுமுறைக்கால சிறப்பு மலை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b