Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.)
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், புகார் மீது வழக்குப்பதிய உத்தரவிடக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் சார்லஸ் அலெக்சாண்டர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தாக்கல் செய்த மேல் முறையீடு மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், புகார் மீது வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று
(அக் 19) நீதிமன்ற உத்தரவை அடுத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b