Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 19 அக்டோபர் (ஹி.ச.)
உலகச்சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வதால், இந்திய ரிசர்வ் வங்கியின் வெளிநாட்டு நாணய கையிருப்பில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மொத்த வெளிநாட்டு நாணயக் கையிருப்பு ரூ 61.89 லட்சம் கோடி என கூறப்பட்டுள்ளது.
இது முந்தைய வாரத்தை ஒப்பிடும்போது மொத்த கையிருப்பு ரூ.25,580 கோடி அளவுக்கு குறைந்திருந்தாலும், தங்கக்கையிருப்பு பகுதி மட்டும் சிறப்பாக உயர்ந்துள்ளது.
தங்கத்தின் சர்வதேச விலை கடந்த சில வாரங்களில் தொடர்ச்சியாக உயர்வை கண்டுள்ளது. இதனால், ரிசர்வ் வங்கியின் தங்கக் கையிருப்பின் மதிப்பு ரூ.30 ஆயிரத்து 998 கோடி உயர்ந்து மொத்த தங்க கையிருப்பு மதிப்பு ரூ.9.07 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலத்தை ஒப்பிடும்போது ரூ.3.55 லட்சம் கோடி அதிகமாகும். இது அமெரிக்க டாலர் மதிப்பில், தங்கக் கையிருப்பு 102.36 பில்லியன் என உயர்ந்துள்ளது.
இது இந்திய வரலாற்றில் மிக உயர்ந்த நிலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ரிசர்வ் வங்கி தங்கத்தை வெளிநாட்டு சொத்தாக வைத்திருப்பதோடு, அதை வணிக நோக்கத்திற்காக விற்பனை செய்யாது.
எனினும், தங்கத்தின் உலகளாவிய விலை உயர்வு இந்திய கையிருப்பின் மதிப்பை தானாகவே அதிகரிக்கிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வட்டி விகிதம் குறைவாகும் என்ற எதிர்பார்ப்பும், மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் பதற்றங்களும், முதலீட்டாளர்களை தங்கத்தில் முதலீடு செய்ய தூண்டியுள்ளன. இதனால் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM