Enter your Email Address to subscribe to our newsletters
ராமநாதபுரம், 19 அக்டோபர் (ஹி.ச.)
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த
காந்தாரா சாப்டர் 1 பிளாக்பஸ்டராக மாறியுள்ள நிலையில், ரிஷப் ஷெட்டி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் இன்று மாலை சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.
முன்னதாக சாமி தரிசனம் செய்ய வந்த ரிஷாப் ஷெட்டிக்கு ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பு வேதாச்சாரியார்கள் வேதமுழங்க பூரண கும்பம், மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் திருக்கோவிலுக்கு வந்த ரிஷாப் ஷெட்டி ராமநாத சுவாமியை மனமுருகி பிராத்தித்து தரிசனம் செய்தார்.
இன்று பிரதோஷம் என்பதால் நீண்ட நேரம் ராமநாதசுவாமி சன்னதி முன்பு காத்திருந்து சாமி தரிசனம் செய்தார்.
அதனை தொடர்ந்து பர்வதவர்த்தினி அம்பாள், பிள்ளையார், முருகன், மகாலட்சுமி ஆஞ்சநேயர், நடராஜர் என திருக்கோயில் வளாகத்தில் உள்ள சன்னதிகளில் மனம் உருகி பிரார்த்தனை செய்தார்.
கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்த கன்னட மற்றும் பல மொழிகளை சேர்ந்த பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு ரிஷாப் ஷெட்டியுடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் பெங்களூரில் சேர்ந்த 50 வயது பெண் ரசிகை ஒருவர் ரிஷாப் ஷெட்டியை முத்தமிட்டு வாழ்த்தினார். இது பக்தர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், காந்தாரா படத்தில் மிகவும் நன்றாக நடித்துள்ளீர்கள், காந்தாரா வேடம் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது, சாமி வேடம் அணிந்த உங்களை பார்க்கும்போது அந்த சாமியை நேரடியாக திரையில் பார்த்தது போல் இருந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சாமி தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரிஷாப் ஷெட்டி, காசிக்கு சென்றதால் ராமேஸ்வரம் வந்துள்ளேன்.
காந்தாரா திரைப்படம் சிவன் மற்றும் காவல் தெய்வத்தை பற்றிய கதையை கருவாக வைத்து இயக்கப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை யும், அதிக வசூலை வசூலை தந்துள்ளது. சிவனின் ஆசீர்வாதம் கிடைத்ததின் காரணமாக ராமேஸ்வரம் வந்துள்ளேன்.
ராமேஸ்வரத்தில் சிறப்பு தரிசனம் கிடைத்தது காசிக்கு சென்று விட்டு ராமேஸ்வரம் வந்துள்ளேன். இன்று ராமேஸ்வரத்தில் மனப்பூர்வமாக தரிசனம் செய்தேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழ்மொழி அல்லாமல் கன்னட மொழியில் எடுத்த திரைப்படம் தமிழ்நாட்டில் அதிக வரவேற்பை பெற்று நல்ல வசூல் தந்ததற்கு தமிழக மக்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றிக்கு காரணம் தமிழக மக்களே, எனவே செய்தியாளர் சந்திப்பின் வாயிலாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் காந்தாரப் படம் வெற்றி அடையச் செய்ததற்காக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதிக திரையரங்குகளில் நல்ல முறையில் ஓடுவதால் ஓடிடியில் படத்தை வெளியிடுவது குறித்து தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
கிராமத்தை விட்டு நகரங்களை நோக்கி செல்லும் மக்கள் கிராமத்தில் உள்ள காவல் தெய்வங்களை மறவாமல் வழிபட்டு வருகின்றனர். அந்த நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் முழுமையாக காந்தாராவில் வெளிப்படுத்தியதால் இந்த படம் தமிழக மக்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு பெற்றுள்ளது என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN