Enter your Email Address to subscribe to our newsletters
திருப்பதி, 19 அக்டோபர் (ஹி.ச.)
கடந்த சில நாட்களாக ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் தேங்கி காணப்படுகிறது. குறிப்பாக நெல்லூர், சித்தூர், விஜயநகரம், குண்டூர், பிரகாசம் மற்றும் திருப்பதி உள்ளிட்ட இடங்களில் இன்று (அக் 19) இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அப்பகுதிகளில் நாளை மறுநாள் (21-ந்தேதி) முதல் பருவநிலை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக திருப்பதியில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால், திருப்பதி மலைப்பாதையில் பாறைகள் சரிந்து உள்ளன. இதனை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
வார இறுதி நாட்கள் மற்றும் தீபாவளி பண்டிகை உள்ளிட்டவற்றை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதி கோவிலுக்கு அதிக அளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திருப்பதி செல்லும் மலைப்பாதையில் பாறைகள் சரிந்து உள்ளன. அதனால், பக்தர்கள் கவனத்துடன் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / vidya.b