Enter your Email Address to subscribe to our newsletters
திண்டுக்கல், 19 அக்டோபர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமமான ஐந்து வீடு பகுதியில் அமைந்துள்ள ஐந்து வீடு அருவிக்கு நேற்று (அக் 18) பொள்ளாச்சியில் இருந்து 11 நண்பர்கள் மாலை வேலையில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது பொள்ளாச்சியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவன் நந்தகுமார் (21) எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். அவர் சில மணி நேரம் ஆகியும் வெளியே வராததால் உடன் வந்த நண்பர்கள் கிராமத்தில் உள்ள பொது மக்களுக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உடலை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆனதாலும் அருவியல் நீர் அதிகரித்துக் காணப்பட்ட காரணத்தாலும் உடலை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று (அக் 19) காலையில் வந்த தீயணைப்புத் துறையினர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் மிகவும் ஆபத்தான இந்த அருவியில் இதுவரை 11 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அருவியின் ஆபத்தான பகுதியில் பாதுகாப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது வரை பாதுகாப்பு கம்பிகள் அமைக்கப்படாததால் உயிரிழப்புகள் தொடர்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b