வட இந்திய தொழிலாளர்களுக்கு முழுமையாக பாதுகாப்பு வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது - அமைச்சர் சேகர்பாபு
சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.) சென்னை ஜார்ஜ் டவுன் ராஜா அண்ணாமலை மன்ற வளாகத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பாக துறைமுகம் சட்டமன்ற தொகுதிகளில் வசிக்கும் 800 வடஇந்திய வாழ் குடும்பங்களுக்கு தீப ஔி திருநாளை முன்னிட்டு அவர்களுக்கு பரிசு பொருட்களை அம
Sekar


சென்னை, 19 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை ஜார்ஜ் டவுன் ராஜா அண்ணாமலை மன்ற வளாகத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பாக துறைமுகம் சட்டமன்ற தொகுதிகளில் வசிக்கும் 800 வடஇந்திய வாழ் குடும்பங்களுக்கு தீப ஔி திருநாளை முன்னிட்டு அவர்களுக்கு பரிசு பொருட்களை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

பின்னர் இந்த நிகழ்வின் மேடையில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது,

நமஸ்கார், ஆஜாவ் ஆஜாவ் என கூறி அனைவருக்கும் இந்தி மொழியில் தீபாவளி வாழ்த்து தெரிவித்து ஜெய்வீரேந்தர் என கூறினார்.

இங்கு எத்தனை பேருக்கு தமிழ் தெரியும் என கூறிய போது அனைவரும் தெரியும் என கூறினர். அப்போது வடஇந்தியாவை சேர்ந்த ஒரு பெண் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழக அரசை பற்றி பேசி இருப்பார்.

அமைச்சர் சேகர்பாபு பேச மேடைக்கு வரும் போது அவரது இருக்கையில் அந்த பெண் அமர்ந்து இருந்தார்.

அதை பார்த்த அமைச்சர் சேகர்பாபு வேறு ஒரு அரசியல் மேடையில் இது போன்று ஒரு கட்சி நிகழ்ச்சியில் வடஇந்தியாவை சேர்ந்த பெண் மேடையில் அமர முடியுமா எனவும் இது தான் திராவிட மாடல் ஆட்சியின் Moment என தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் வாழும் வடமாநிலத்தினர் எவ்வளவு பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்பதை பற்றி வடஇந்திய பெண் வர்ஷா என்பவர் பேசி இருந்தார்.

துணை முதலமைச்சர் கூறியது போல் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் எனவும் வேறு மொழி வேறு காலாச்சாரம் என்றாலும் நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என தெரிவித்தார்.

மனிதன்,மனித நேயத்தை காக்கும் ஒரு ஆட்சியாக இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது ,பிளவுகளுக்கு இடம் இல்லை.

இந்தியை படிப்பதை வேணாம் என்று சொல்ல மாட்டோம் ,இந்தியை திணிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

வட இந்தியர்கள் அதிகம் தொழில் செய்யும் கேந்திரியம் என்றால் அது சென்னை தான், தென் இந்தியாவின் மான்செஸ்டர் கோயமுத்தூர் என்றால் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் சவுகார்பேட்டை என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

வட இந்திய தொழிலாளர்கள் ,தொழில் செய்யும் நபர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கும் அரசு திமுக தான், நீங்கள் எங்களை ஆதரித்தாலும்,ஆதரிக்க விட்டாலும் நீங்கள் மனிதர்கள், முதல்வர் சொன்னது போல வாக்கு அளித்த மக்கள் வாக்கு அளிக்காத மக்கள் என அனைவருக்குமான ஆட்சியாக இருக்கும் என கூறினார் அந்த வகையில் ஆட்சி நடைபெற்று வருகிறது ,தனி மனிதருக்கு பாதிப்பு அது இயக்கத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ