Enter your Email Address to subscribe to our newsletters
தென்காசி, 19 அக்டோபர் (ஹி.ச.)
தீபாவளி பண்டிகையானது நாளைய தினம் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பண்டிகையை கொண்டாடுவதற்காக ஏராளமான பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
அந்த வகையில், தீபாவளி பண்டிகையின் போது சாமி கும்பிடுவதற்காக ஏராளமான பொதுமக்கள் பூக்களையும் வாங்கி சென்று வரும் நிலையில், பூக்களின் தேவை அதிகமாக இருப்பதன் காரணமாக தற்போது பூக்களின் விலையானது மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, தென்காசி மலர் சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ 2500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ கிலோ 2500 ரூபாய்க்கும், கேந்தி பூ -40 ரூபாய்க்கும், ரோஸ் பூ - 150 ரூபாய்க்கும், செவ்வந்திப் பூ -150 ரூபாய்க்கும், அரளிப்பூ 230 ரூபாய்க்கும், கொளுந்துப்பூ 200 ரூபாய்க்கும், சம்பங்கி பூ 150 ரூபாய்க்கும், செண்பகப்பூ 60 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 120 ரூபாய்க்கும் விற்பனையாகி வரும் நிலையில், மல்லிகை பூ மற்றும் பிச்சிப் பூவின் விலை 3 மடங்காக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, பண்டிகை கால தேவைகள் அதிகமாக இருப்பதன் காரணமாகவும், தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாகவும் பூக்களின் விளைச்சல் என்பது பாதிப்படைந்துள்ள நிலையில், தற்போது இந்த விலை ஏற்றம் அடைந்துள்ளதாகவும் பண்டிகை கால முடிவின் பின்னர் படிப்படியாக பூக்களின் விலை என்பது குறையும் எனவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN