Enter your Email Address to subscribe to our newsletters
தென்காசி, 19 அக்டோபர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை தீவிரமடைந்துள்ளது. அக் 17 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கியது.
அக் 17 ஆம் தேதி காலை வரை 24 மணி நேரத்தில் தென்காசியில் 99 மி.மீ. மழை பெய்தது.
இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று
(அக் 18) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்த நிலையில் அதன்பிறகு வெயில் முகம் காட்ட தொடங்கியது.
முற்றிலும் மழைப்பொழிவு குறைந்ததால் குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று தணிந்தது. செம்மண் நிறத்தில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு விழுந்த நிலையில் நேற்று அனைத்து அருவிகளிலும் தெளிந்த நீராக விழத்தொடங்கியது. ஆனால் அருவிகளில் வெள்ளத்தின் சீற்றம் இன்னும் குறையவில்லை.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் இன்று
(அக் 19) 4வது நாளாக வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. இதனால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்றும் தொடர்கிறது.
தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குற்றாலம் அருவிகளுக்கு சென்று வெள்ளப் பெருக்கை பார்த்துச் சென்றனர்.
இதையடுத்து அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சீரானதும் விரைவில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுபவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b