Enter your Email Address to subscribe to our newsletters
கள்ளக்குறிச்சி, 19 அக்டோபர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அமைச்சர் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (16) இவர் தனியார் பள்ளியில் ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார் தீபாவளி விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் செல்பி எடுத்து ரீல்ஸ் போடுவதற்காக உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்திற்கு நண்பருடன் சென்றுள்ளார்.
அப்பொழுது உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் சரக்கு டேங்கர் ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த ரயில் மீது மாணவன் சதீஷ்குமார் ஏறி, செல்போனில் தன்னை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின்சார கம்பி மீது பட்ட போது மாணவன் சதீஷ்குமார் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
அதிர்ச்சியடைந்த நண்பர்கள் படுகாயம் அடைந்த மாணவனை மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து விருதாச்சலம் ரயில்வே உதவி ஆய்வாளர் சின்னப்பன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரீல்ஸ் மோகத்தால் 11ஆம் வகுப்பு மாணவன் ரயில் மீது ஏறி வீடியோ எடுத்த போது மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / ANANDHAN