Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.)
பைசன் படத்தின் நிஜ நாயகன் மனத்தி கணேசனுடன் அவரது உடற்பயிற்சி ஆசிரியர் மெஞ்சனாபுரம் தங்கராஜ் அவர்களை
இயக்குனர் மாரி செல்வராஜ் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
சமீபத்தில் வெளியான பைசன் திரைப்படம் மக்களிடம் வரவற்பை பெற்று திரையரங்குளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மாரி செல்வராஜ் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.
பைசன் படத்தில் துருவ் கபடி வீரராக நடித்திருக்கிறார், படத்தில் அவருக்கு ஊக்கமளிக்கும் உடற்பயிற்சி ஆசிரியராக நடிகர் மதன் நடித்திருக்கிறார்.
தென் தமிழகத்து மக்களின் வாழ்வியலையும், கபடி விளையாட்டையும் நிஜ கபடி வீரர் மனத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையையும் இந்தப்படம் பேசுகிறது.
நிஜத்தில் மனத்தில் கணேசனுக்கு உதவிய ஆசிரியர்தான் மெஞ்சனாபுரம் தங்கராஜ் அவர்கள்.
இன்று இயக்குனர் மாரிசெல்வராஜ் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக உடற்கல்வி ஆசிரியர் தங்கராஜ் அவர்களை சந்தித்து
படக்குழுவின் சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J