Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 20 அக்டோபர் (ஹி.ச.)
தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள ஈரநெஞ்சம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வசிக்கின்ற முதியவர்கள் பட்டாசு வெடித்தும் நடனம் ஆடியும் தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.
மேலும் முதியோர் இல்லத்தில் இருக்கும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியது முதியோர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து முதியவர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது அதனை முதியோர்கள் மகிழ்ச்சியாக உண்டு மகிழ்ந்தனர்.
வீட்டில் எவ்வாறு தீபாவளி பண்டிகை கொண்டாடுகிறோமோ அதே போல் இங்கு கொண்டாடி வருவதாகவும் அது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் முதியவர்கள் தெரிவித்தனர்.
இங்கு ஆதரவற்றவர்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக வசித்து வரும் நிலையில் இவர்கள் கொண்டாடிய தீபாவளி பண்டிகை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / V.srini Vasan