தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் 45 -ஆம் ஆண்டு வெற்றி சைக்கிள் போட்டி
புதுக்கோட்டை, 20 அக்டோபர் (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்ட மாநகர் மாலையிடு பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஊர் மக்கள் நடத்தப்படும் 45 வது ஆண்டு மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந் நிகழ்வில் கரூர் திருச்சி கோயம்புத்தூர் மதுரை உள்ளிட்ட
சைக்கிள் போட்டி


புதுக்கோட்டை, 20 அக்டோபர் (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்ட மாநகர் மாலையிடு பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஊர் மக்கள் நடத்தப்படும் 45 வது ஆண்டு மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கரூர் திருச்சி கோயம்புத்தூர் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற போட்டியை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா தொடங்கி வைத்தார்.

இன்று தீபாவளி பண்டிகை முன்னிட்டு மாலையீடு இளைஞர் நற்பணி மன்றமும் ஊரார்களும் இணைந்து நடத்தும் 45 ஆம் ஆண்டு மாபெரும் வெற்றிக்கோப்பைக்கான சைக்கிள் போட்டிகள் நடைபெற்றது.

இந்த சைக்கிள் போட்டியில் கரூர் திருச்சி தொட்டியம் சிவகங்கை மதுரை திருநெல்வேலி ji கோயம்புத்தூர் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த சைக்கிள் போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடைபெற்றது இந்த சைக்கிள் போட்டியினை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா போட்டியை துவக்கி வைத்து வைத்து சிறப்பித்தார்.

மேலும் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசாக 20,000 இரண்டாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாய் மூன்றாம் பரிசாக பத்தாயிரம் ரூபாய் 5,000 ரூபாய் வழங்கப்பட்டது.

Hindusthan Samachar / Durai.J