Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.)
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக முதல்வர் ஸ்டாலின்,எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் , எஸ்.வி.சேகர் உள்ளிட்ட முக்கிய நபர்களின் வீடுகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக நேற்று(அக் 19) காலை இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துது. இதேபோல, சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து நடைபெற்ற சோதனையில் இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் புரளி என்பது தெரியவந்தது.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b