Enter your Email Address to subscribe to our newsletters
லே, 20 அக்டோபர் (ஹி.ச.)
லடாக்கை தனி மாநிலமாக அங்கீகரிக்க வேண்டும், தங்கள் தாய்மொழியை அரசியலமைப்பின் அட்டவணையில் இணைக்கவும் கோரிக்கை விடுத்து கார்கில் ஜனநாயக கூட்டணி, லே அபெக்ஸ் பாடி போன்ற 2 அமைப்புகள் போராட்டம் நடத்தியது.
அப்போது ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள். இதையடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பதற்ற நிலை நீடித்து வருகிறது.
இதையடுத்து பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர உள்துறையை சேர்ந்த மத்திய குழுவினர், போராட்ட குழுவினரை பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர்.
இந்த அழைப்பை இரு போராட்ட அமைப்புகளும் ஏற்று பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்து உள்ளனர்.
இரு அமைப்புகளின் 3 பிரதிநிதிகள், லடாக் எம்.பி. முகமது ஹனீபா ஜான் உள்ளிட்டோர் மத்திய குழுவினரை 22-ந் தேதி சந்திக்க உள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM