தீபாவளியான இன்று தங்கத்தின் விலை சற்று சரிவானது
சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.) தீபாவளி தினமான இன்று (அக்.20ம் தேதி) தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து 1 கிராம் ரூ.11,920-க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.95,360க்கும் விற்பன
Gold and silver


சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.)

தீபாவளி தினமான இன்று (அக்.20ம் தேதி) தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து 1 கிராம் ரூ.11,920-க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.95,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து 1 கிராம் ரூ.9,850க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ. 78,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.190க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ