இரண்டாவது நாளாக வெறிச்சோடி காணப்படும் சென்னை
சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.) இரண்டாவது நாளாக சென்னையின் பிரதான சாலைகள் வாகனங்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த தி.நகரும் ஆரவாரமின்றி காணப்படுகிறது. தீபாவளி பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகி
Chennai


சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.)

இரண்டாவது நாளாக சென்னையின் பிரதான சாலைகள் வாகனங்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த தி.நகரும் ஆரவாரமின்றி காணப்படுகிறது.

தீபாவளி பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதற்காக கடந்த இரண்டு தினங்களாக சென்னையில் வசித்து வந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதன் காரணமாக சென்னையின் பிரதான சாலைகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஜி.எஸ்.டி சாலை என அனைத்த சாலைகளும் வாகனங்கள் ஏதுமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

நேற்றைய தினம் வரை புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க சென்னை தி.நகரை நோக்கி மக்கள் படையெடுத்து வந்தனர்.

ஆனால் இன்று எந்த வித ஆரவாரமும் இன்றி கடைகள் மற்றும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ